சித்தர்களிடமிருந்து எனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும்
அவர்கள் எனக்குத்தந்த நவபாஷாணம் என்ற பரிசைப்பற்றியும்
நான் எழுதியிருக்கும் பதிவுகளை படித்து விட்டு தொலைபேசியில் பேசிய பலர்
அதைக் கொண்டு நீங்கள் யாருக்காகவாவது நன்மை செய்திருந்தால் அதை எழுதலாமே என்று சொன்னார்கள்
அதனால் நவபாஷாணம் மூலம் எனக்கேற்பட்ட முதல் அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்
நிறைய பேர் நவபாஷனம் என்பது நேரிடையாக நோயை குணப்படுத்தும் மருந்து என நினைத்துக் கொண்டுயிருக்கிறார்கள்.
அது முற்றிலும் தவறுதலான எண்ணமாகும்.
பொதுவாக நோய் என்பது உடலில் உள்ள உயிர்காக்கும் சத்துக்கள் குறைவதினால் தான் வருகிறது.
இந்த விதி எய்டஸ் நோய் முதல் ஜலதோஷம் வரை பொருந்தும்.
நவபாஷானம் என்பது உடம்பில் இழந்து விட்ட சத்துக்களை நோய் எதிர்ப்பு சக்திகளை மீண்டும் கட்டி தருவதாகும்.
அதனால் தான் இந்த மருந்து எல்லா நோய்களுக்கும் பரம ஒளஷதமாக இருக்கிறது.
புற்று நோயின் கொடுமை தன்மையை நாம் எல்லோருமே அறிவோம்.
பழங்கால சித்தர் பாடல் ஒன்று புற்று நோய் வந்து மாண்டவர்கள் மீண்டும் பிறப்பதில்லை என்று சொல்கிறது.
அதாவது பூர்வ ஜென்ம கர்மாவினால் வந்த பாவத்தையும், தற்போதைய பிறப்பில் செய்த பாவ விளைவுகளையும் ஒரே நேரத்தில் அனுபவிப்பது போன்ற கொடுமை தான் புற்றுநோயின் வேதனை என்பது முன்னோர் வாக்கு.
பன்நெடுங்காலமாகவே மனித சமுதாயம் புற்றுநோயோடு மோதி தோற்று போய் நிற்கிறது.
இதற்கு காரணம் புற்று நோயிலிருந்து விடுபட மருந்து இல்லாமல் இல்லை.
ஆனால் இது தான் புற்று நோய் என்று வைத்தியன் கண்டுபிடிப்பதற்கு முன்பே அந்த நோய் எல்லை மீறி மனித உயிர்களை காவுக் கொண்டுவிடுகிறது.
சென்னையிலிருந்து ஒரு இளம் பெண்ணை அவள் பெற்றோர்கள் அழைத்து வந்து இருந்தனர்.
செடியிலிருந்து அப்போது தான் பறித்த புத்தம் புது மலர் போல அந்த பெண் மலர்ச்சியுடன் இருந்தாள்.
அவளுக்கு ரத்த புற்றுநோய் என்பதை கற்பூரம் அனைத்து சத்தியம் செய்தாலும் நம்புவது கடினம்.
ஆனால் கடவுள் எதற்காகவோ அந்த சின்ன பெண்ணை பெரியதாக அவஸ்தை படுத்திக் கொண்டிருந்தார்.
பல நேரங்களில் நாம் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு காரணம் என்னவென்றே தெரியாது.
துருவி துருவி ஆராய்ந்தாலும் அது நமக்கு புரிவதில்லை.
நேற்று நாம் பாவம் செய்தோம் என்றால் இன்று அதற்கான தண்டனை அனுபவிப்பது என்பது இதற்காகத் தான் என்று தெரியும்.
சென்ற பிறவியில் செய்த பாவம் இன்னதென்று யாருக்கு தெரியும்?
அதனால் ஏற்படும் வேதனைகளை இந்த நோய்கள் என்று மனதை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்.
வேறு எந்த மார்க்கமும் கிடையாது.
நிச்சயமாக அந்த பெண் இந்த பிறவியில் பாவம் செய்திருக்க மாட்டாள்.
அதற்கான வயது அவளுக்கு இன்னும் வரவில்லை.
ஒன்று பெற்றவர்களின் பாவத்திற்காக அவள் வேதனைப்பட வேண்டும்
அல்லது பூர்வ ஜென்மத்திலிருந்து சுமந்து வந்த பாவ மூட்டைகளை இப்படி செலவிட வேண்டும்.
எது எப்படியோ? அந்த பெண் பார்த்தவுடன் அவளுக்கு இருக்கும் நோயை அறிந்தவுடன் கல்நெஞ்சன் கூட கண்ணீர் வடிப்பான்.
எனக்கு கிடைத்த நவபாஷானத்தை முதல் முறையாக அந்த பெண்ணிற்கு நம்பிக்கை இல்லாமல் தான் கொடுத்தேன்.
அவளிடமோ அவள் பெற்றோரிடமோ எந்த உறுதி மொழியும் நான் கொடுக்கவில்லை.
காரணம் அதைப்பற்றி எனக்கு எந்த முன் அனுபவமும் இல்லை என்பதினால் தான்.
ஆனால் மூன்று மாதத்தில் அவர்களிடமிருந்து மிக மகிழ்ச்சியான செய்தி வந்தது.
அந்த பெண்ணின் நோயின் வேகம் பாதி அளவு குறைந்து இருப்பதாக தங்களுக்கு புது நம்பிக்கை ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் சொன்னார்கள்.
அவர்களுக்கும் மகிழ்ச்சி தான். எனக்கோ அதை விட பன்மடங்கு மகிழ்ச்சி